அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் 25.07.2023 முன்னர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 1,231 மாணவர்களுக்கு வெளிப்படையான முறையில் மாவட்டங்களில் இருந்த காலிப்பணியிடங்களை தேர்வு செய்யும் வகையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மீதமுள்ள 2,417 காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வழங்கினார்.