சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் ஊராட்சிகளில் வீடு தோறும் குப்பைகளை சேகரிக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் தூய்மை பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுக்கலாம் என்றும் அதற்கு மேல் கூடுதலாக விடுப்பு எடுத்தாள் அவர்களுக்கு ஒருநாள் ஊதியமாக ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒரு மாதத்திற்கு 4 நாள் போக மீதமுள்ள நாட்கள் விடுப்பு எடுத்தால் ரூ.160 பிடித்தம் செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.