Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூர், நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (20-09-2025) தமிழக வெற்றி கழகம் சார்பில் அந்த கட்சியின் தலைவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்திற்கு மதியம் 2 மணி முதல் 3 மணி வரை காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். மேலும் 26 விதிமுறைகளையும் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் சுமார் 5 மணியளவில் திருவாரூர் நகருக்குள் வந்த விஜய்க்கு கிரேன் மூலமாக மாலை அணிவித்தனர்.

மக்கள் கூடியுள்ள இடத்தில் அனுமதி பெறாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கிரேன் மூலமாக மாலை அணிவித்து வரவேற்பு அளித்த மாவட்ட மாவட்ட தவெக தலைவர் மதன் உள்பட 3 நிர்வாகிகள் மற்றும் கிரேன் உரிமையாளர் ராஜேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தனியார் சொத்துக்களை சேதப்படுத்தியதாக நாகையில் தவெகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.