சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மர்ம தொலைபேசி வந்தது. இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் இரு இடங்களிலும் சோதனை நடத்தினர். முடிவில் அது புரளி என தெரிந்தது. தகவலறிந்து கட்சி நிர்வாகிகள் தேமுதிக அலுவலகம் அருகே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement