சென்னை : ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சேகர் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன். கரூரில் ரூ.100 கோடி மதிப்பு 22 ஏக்கர் நிலத்தை தன் மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவு செய்துகொண்டதாக பிரகாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement