திருவண்ணாமலை: விஜய் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கூறினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் நடிகை கஸ்தூரி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி: கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி என்பது சரி வராது. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து செயல்படுவதுதான் விஜய்க்கு சரியாக இருக்கும்.
விஜய் கட்சியில் தற்போது இருப்பவர்களிடம் இருந்து அவர் விலகி இருப்பது நல்லது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகி இருப்பது, அதிமுகவுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுதான் காரணம். பாஜவுடன் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை.