நெல்லை: வ.உ.சிதம்பரனாரின் 89வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை டவுன் மணி மண்டபத்தில் உள்ள அவருடைய சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐ.ஆருக்கு எதிராக விஜய் போராட வேண்டுமானால் டெல்லியில் உள்ள ஒன்றிய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எஸ்ஐஆர் என்ற பெயரில் மாநில அரசுக்கு எதிராக போராடுவது வெறும் கண்துடைப்பு. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு போராடுபவர்களை மக்கள் நம்பவில்லை. போராட்டத்தில் எஸ்ஐஆருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement


