திருவாரூர்: திருவாரூரில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். தவெக தலைவர் விஜய், அரசியல் பயணம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் வாழ்த்துக்கள் என்பது மட்டுமே எனது பதிலாகும்.
அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கம் மற்றும் பாமகவில் தற்போது நடைபெற்று வருவது அவர்களது உட்கட்சி பிரச்சனை என்பதால் பதில் கூற விரும்பவில்லை. இருப்பினும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது தான் எனது பதிலாகும். தங்கம் மட்டுமின்றி அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துவிட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.