சென்னை: விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். தொடந்து இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு; கரூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை. கரூர் சம்பவத்தைவிட அதிக கூட்டம் எதிர்க்கட்சித் தலைவருக்கு கூடியது; அங்கு ஒன்றும் நடக்கவில்லை.
காரணம், எதிர்க் கட்சித் தலைவர் பேசுவதை கவனிக்க வருகிறார்கள்; அவரும் பேருந்தில் ஏறி பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் பேருந்தின் மீது ஏறி இரண்டு பக்கமும் கை காட்டுவதால் நெரிசல் ஏற்படவில்லை. விஜய் உள்ளேயே அமர்ந்து செல்கிறார்; பேசும் இடத்தில் மட்டுமே மேலே வருகிறார்; அதனால் நெரிசல். கரூரில் காவல் துறை பொறுப்புடன் மிகச் சிறப்பாகவே செயல்பட்டது என்று கூறினார்.