சென்னை: விஜய் குறித்து நீதிமன்றம் விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளை மக்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். எனவே இனிமேல், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணை ஆணையம் நியாயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புவோம் என கனிமொழி எம்பி கூறினார். திமுக துணை பொதுச்செயலாளரும், பாராளுமன்ற திமுக அணி குழு தலைவருமான கனிமொழி எம்பி சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார்.
அப்போது அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு தலைவருக்கான பண்பு இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்றம் விமர்சனம் என்பது தனது கருத்துகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டும். மக்கள் இதைக் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
எனவே அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை. கரூர் சம்பவம் குறித்து ஏற்கனவே அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், நீதிமன்றம் அமைத்துள்ள விசாரணை ஆணையம், நியாயமாக இருக்கும் என்று நிச்சயமாக நம்புவோம். இவ்வாறு கனிமொழி எம்பி கூறினார்.