நாமக்கல்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த 13ம்தேதி முதல் சனிக்கிழமை தோறும் பிரசாரம் செய்து வருகிறார். அந்தவகையில், இன்று காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாமக்கல்- சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின்ரோடு பகுதியில் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அந்த பகுதியில் கட்சியினரால் பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டால், அதற்கு அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர். நாமக்கல் நகரில் பிரசாரம் செய்துவிட்டு, முதலைப்பட்டி பைபாஸ் சாலை வழியாக நடிகர் விஜய் கரூர் செல்கிறார். நண்பகல் 12.00 மணிக்கு கரூர்-ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே விஜய் பிரசாரம் செய்து கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
+
Advertisement