சென்னை: மதுரை தவெக மாநாட்டில் சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் தூக்கி கீழே வீசிய புகாரில், விஜய் மற்றும் அவரது பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பவுன்சர்கள் தள்ளிவிட்டதில் இளைஞருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆபாசமாக திட்டுதல், தாக்குதல், தூக்கி வீசுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement