சென்னை: தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் செய்த கூட்டத்தில், 40 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய முறையில் நீதி கிடைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அதற்கான தொகையை தமிழக வெற்றி கழகம் தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
நேற்றைய உயிர் இழப்பு சம்பவத்திலும் ஒரு மன்னிக்க முடியாத குற்றவாளி என்பதை தான் மனசாட்சியுடன் உணர்ந்து தமிழக மக்களிடம் நடிகர் விஜய் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக காவல்துறை உடனடியாக விஜய் மேல் வழக்கு பதிவு செய்து, விஜய் மற்றும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளாக உள்ள தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகிகளை கைது செய்து சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுக்க வேண்டும். முழுமையான அனைத்து வித விசாரணைகளும் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.