தர்மபுரி: அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்னும் தலைப்பில், தர்மபுரி பிஎஸ்என்எல் அருகில் நடந்த பிரசார கூட்டத்தில் நேற்று பேசுகையில், ‘கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவருக்கும் தெரியும். 41 பேர் உயிரிழந்ததற்கு யார் காரணம்?. ஒருநபர் விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டு விட்டது. அதனால் மேலோட்டமாக பேச வேண்டிய சூழலில் இருக்கிறோம்’ என்றார். பின்னர், கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில், உயிரிழந்த 41 பேரின் ஆன்மா சாந்தி அடைய, எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
+
Advertisement