கோவை: கோவையில் நேற்று பாஜ எம்எல்ஏவும், தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிகாரபூர்வமாக யார் அழைத்தார்கள் என்பதை அவர் தான் கூற வேண்டும். எங்களை பொருத்தவரை அதிமுக கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டிய எண்ணம் கிடையாது. கூட்டணியை பலமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பது தான் எங்களுக்கு டெல்லியில் இருந்து வந்த தகவல்.
திமுகவை வீழ்த்துவேன் என கூறும் விஜய், திமுகவை தனியாக எப்படி வீழ்த்த முடியும். அதற்கு என்ன பலம் அவருக்கு இருக்கிறது. என்ன திட்டம் இருக்கிறது. ஒன்றாக இணைய வேண்டும் என அனைத்து பாஷையிலும் விஜய் கூறுகிறார். ஆனால் யாருடன் ஒற்றிணைய வேண்டும் என்கிறார்.?. இவ்வாறு அவர் கூறினார்.

