திருச்சி: திருச்சியில் மதிமுக முதன்மை செயலாளரும், எம்பியுமான துரை.வைகோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பொத்தாம் பொதுவாக அனைவரையும் குற்றச்சாட்டி விஜய் பேசுவது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. குறிப்பாக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அவர் கூறுவது ஏற்புடையதல்ல. எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறார்கள், எங்கு அந்த முதலீடு செய்ய போகிறார்கள் என்ற தரவுகளுடன் தான் முதல்வர் பதில் கூறியுள்ளார். இருந்தும் விஜய் இப்படி பேசுவது அவருடைய தகுதிக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement