திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று காலை கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த நடிகர் சிவராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் வரவேற்கத்தக்கது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
கரூர் பிரசாரத்தில் எதனால் உயிர்பலி நடந்தது என எனக்கு தெரியாது. தமிழ்நாட்டு அரசியல் பற்றி எனக்கு தெரியாது. தவெக தலைவர் விஜய் நன்றாக யோசித்து நிதானமாக சில முடிவுகளை எடுக்க வேண்டும் என சக நடிகராகவும், சகோதரனாகவும் சொல்கிறேன்’ என்றார்.