திருவாரூர்: திருவாரூரில் தவெக தலைவர் விஜய், கடந்த 20ம்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திருவாரூர் பனகல் சாலை அழகிரி காலனி அருகே பிரசார சொகுசு பஸ்சில் வந்த விஜய்க்கு மாவட்ட செயலாளர் மதன் உள்ளிட்ட சிலர் கிரேன் மூலம் மாலை அணிவித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றான பனகல் சாலையில் பொதுமக்களுக்கு ஆபத்து, அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், உரிய அனுமதியின்றியும், எவ்வித பாதுகாப்பும் இல்லாமலும் கிரேன் மூலம் மாலை அணிவித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் மதன்(32), அவரது தம்பி மனோ(30), அழகிரி காலனியை சேர்ந்த சரவணன் மகன் அன்பு(30), கிரேன் ஆபரேட்டரும், உரிமையாளருமான கல்லுக்குடியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் மீது திருவாரூர் டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.