கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம்
கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கரூரில் த.வெ.க. சார்பில் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று வரை 40 பேர் உயிரிழந்தனர். கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சுகுணா (65) என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் நேற்று அமைக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக இன்று வேலுசாமிபுரம் பகுதியில் விசாரணை நடத்திவருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார், இன்று காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.