Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார்: டி.டி.வி.தினகரன் பேட்டி!

சென்னை: விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி கூட்டங்களில் அதிமுகவினரே தவெக கொடியை ஏந்தியுள்ளனர். விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக கூட்டங்களில் தவெக கொடியை காண்பிக்கின்றனர். அதிமுக தொண்டரே தவெக கொடியை பிடித்திருப்பது பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியதில் இருந்தே பாஜக கூட்டணி பலவீனமானது.

விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார். விஜய் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாரானதில் இருந்து அதிமுக பலவீனமானது உறுதியாகியுள்ளது. அரசியலில் தரம் தாழ்ந்து செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. கரூர் துயரம் நடந்திருக்கும் இந்த நேரத்தில் கூட்டணி பற்றி எடப்பாடி பேசுவது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தலைமையை ஏற்கும் அளவுக்கு அதிமுக பலவீனமாகிவிட்டது. வீடு பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு கேட்கிறார் எடப்பாடி பழனிசாமி. தவெக தலைவர் விஜய் எடப்பாடி உடன் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை எடப்பாடி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமி நம்பகத்தன்மை அற்றவர்; துரோகத்தை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகவா விஜய் புதிய கட்சியை தொடங்கினார் எனவும் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.