டக் லக்: வியட்நாமில் பந்தாடிய கல்மேகி புயலுக்கு 5 பேர் பலியாகி விட்டனர். 2,600 வீடுகள் சேதமடைந்தன. பிலிப்பைன்சில் கல்மேகி புயலுக்கு 188 பேர் உயிரிழந்தனர். 135க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இந்நிலையில் கல்மேகி புயல் நேற்று முன்தினம் இரவு வியட்நாம் நாட்டை நோக்கி நகர்ந்தது. வியட்நாமை நெருங்கும்போது, தென்சீனக் கடலில் மணிக்கு 220 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்ததால், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் வௌ்ள நீரில் மூழ்கின. நேற்று முன்தினம் இரவு குவாங் நகாய் மற்றும் கியா லாய் மாகாணங்களுக்கிடையே கரையை கல்மேகி புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. புயல் பாதிப்பு குறித்து வியட்நாம் வானிலை மையம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “கல்மேகி புயலுக்கு 5 பேர் பலியாகி விட்டனர். 8 பேர் மாயமாகி உள்ளனர். 52 வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மொத்தமாக 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement

