சென்னை: மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, அவருடன் வருபவர் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக வழங்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement