தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பள்ளிகொண்டா சுங்கசாவடியில் நேற்று அளித்த பேட்டி: 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசார கூட்டத்திற்கு 10 மணி நேரம் காலதாமதமாக விஜய் வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம்.
உச்சபட்ச சினிமா நடிகரை பார்க்கும் ஆர்வத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து விஜய் அதனை ஒழுங்குபடுத்தி இருக்க வேண்டும். இந்த 40 பேர் உயிரிழப்பு படுகொலையே என கருதி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.