Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துணை முதல்வர் பிறந்தநாள் பளுதூக்கும் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பளு தூக்கும் போட்டி நடந்தது. இதில், மேற்கு மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, எம்.பூபதி முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர பிரதிநிதி டி.வி.துரைராஜ் வரவேற்றனர். அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்டிஇ.ஆதிசேஷன், கே.திராவிட பக்தன், உதயமலர் பாண்டியன், சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், ரமேஷ், அரிகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் ரவி, பரசுராமன், ராஜேஸ்வரி கைலாசம், குப்பன், சீனிவாசன், சிவக்குமார், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் கிரண், நாகராஜ், விஜயகுமார், மோதிலால், டி.கே.பாபு, திலீபன், பிரபாகரன், காந்திமதி, பவளவண்ணன், மனோகரன், அமுல் சித்திரை, மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நகர பிரதிநிதி துரைராஜ் செய்திருந்தார்.

கல்வி உபகரணங்கள் : திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜன், சேகர், ராஜமூர்த்தி, வழக்கறிஞர் முத்து, சியாம்சுந்தர், அன்புதாஸ், முரளி, ரவி, ஷாம், செல்வ பெருமாள், ஜெயராமன், தியாகு சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஊராட்சி தலைவர் டி.டி.தயாளன் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா பென்சில் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் அஸ்வந்த் குமார், கிஷோர், கார்த்திக், சந்தோஷ், யோபு, ஸ்ரீ விக்னேஷ், சஞ்சய், கிருஷ்ணன், கரண், ஆரோன், விஷ்வா, பிரவீன் சந்தர், சஞ்சய், பர்வீன் ராஜ், தீபக், சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.