புதுடெல்லி: புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று மாலை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர். இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
+
Advertisement