டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுகிறார். தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிப்பர்.
மக்களவையில் 543 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள். மக்களவையில் ஒரு இடமும் மாநிலங்களவையில் 5 இடமும் காலியாக உள்ளதால் 782 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் தேர்தலை பிஜு ஜனதா தளம், பி.ஆர்.எஸ். கட்சிகள் புறக்கணித்தது. 3 கட்சிகள் புறக்கணிப்பதால் அக்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் 769 பேரே வாக்களிப்பர். 769 பேரே வாக்களிக்க இருப்பதால் வெற்றிக்கு 385 வாக்குகளே தேவைப்படும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாலையே எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.