சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னை வரும் சுதர்சன் ரெட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் சுதர்சன் ரெட்டி. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது.
+
Advertisement