குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன்
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் 20ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள், தே.ஜ.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.