புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமலுக்கு வந்தது. இதில் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய விவகாரத்தில் யு.ஜி.சி, ஆளுநர் மற்றும் வெங்கடாச்சலபதி ஆகிய எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிடுகிறோம் என தெரிவித்து வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
+
Advertisement