சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன.
இதில், பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் https://adm.tanuvas.ac.in ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 26ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெற்றது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் 200க்கு 2010 கட் ஆப் மதிப்பெண் எடுத்து விழுப்புரத்தை சேர்ந்த மாணவி திவ்யா முதலிடமும், பெரம்பலூர் மாணவி கமலி 2ம் இடத்தையும், கடலூர் மாணவிகள் அம்தா மெகதாப் 3ம், மாணவி பார்கவி 4ம் இடத்தையும், இலக்கியா 5ம் இடத்தையும் பெற்றுள்ளனர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத பிரிவில், கடலூர் மாணவி தாரணி முதல் இடத்தையும், பெரம்பலூர் மாணவர் அன்புமணி 2ம் இடத்தையும், கடலூர் மாணவி காருண்யா 3ம் இடத்தையும், அரியலூரை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீஇ 4ம் இடத்தையும், மாணவர் அரவிந்த் 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல், பிடெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் கடலூர் மாணவிகள் பார்கவி முதல் இடத்தையும், பிரவீனா 2ம் இடத்தையும், கார்த்திகா 3ம் இடத்தையும், மெர்லின் 4ம் இடத்தையும், கள்ளக்குறிச்சி மாணவர் லூயிஸ் அர்னால்டு 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிடெக் 7.5 சதவீத இட இதுக்கீட்டில், கடலூர் மாணவிகள் சந்தாணலக்ஷ்மி முதல் இடத்தையும், சிந்துஜா 2ம் இடத்தையும், சாரதி 3ம் இடத்தையும், மதுரை மாணவி மோஷிகா 4ம் இடத்தையும், மாணவி சக்தி 5ம் இடத்தையும் பிடித்துள்ளனர். 200க்கு 200 கட்-ஆப் வரிசையில் முதல் 5 இடங்களையும் மாணவிகளே பிடித்துள்ளனர். மேலும், மொத்த இடங்களில் 13 இடங்களை கடலூரை சேர்ந்த மாணவிகளே பிடித்துள்ளனர்.
மாணவர்கள் https://adm.tanuvas.ac.in மற்றும் https:tanuvas.ac.in ஆகிய இணையதள பக்கத்தில் தரவரிசை பட்டியலை பார்த்துக்கொள்ளலாம். கலந்தாய்வு தொடர்பான தகவல்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
கிறது.