Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 3 இடங்களில் மிக கனமழை பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 3 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் 3 இடங்களில் மிக கனமழையும் 2 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு பகுதியில் தலா 17 செ.மீ. மழை பெய்துள்ளது. காக்காச்சி 14 செ.மீ., மாஞ்சோலை 13 செ.மீ., கொத்தவாச்சேரி 8 செ.மீ., திருவள்ளூரில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புவனகிரி, மீமிசல், மன்னார்குடி, நீடாமங்கலத்தில் தலா 6 செ.மீ, பரங்கிப்பேட்டையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது