சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு உள்ளது.
தேனி, தென்காசி, நெல்லை, ராமநாபுரம் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.