சென்னை: கால்நடை மருத்துவ பல்கலையில் முறைகேடு தொடர்பாக வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளது. சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் ரூ.5 கோடிக்கும் அதிகமாக முறைகேடு செய்திருப்பது அம்பலமானது. முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து 15 நாட்களுக்கு அறிக்கை அளிக்க பல்கலைக்கழகம் உத்தரவு அளித்துள்ளது. முறைகேட்டில் சிக்கிய 5 அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
+
Advertisement