இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட காயத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மற்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
+
Advertisement