Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவ்ளோ பெரிய அப்பாடக்கரல்ல... வெங்கடேஷ் ஐயரை பிரிச்சி மேயும் பிஞ்ச்!

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பேட்டியில், ஐ.பி.எல்.லில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவர் போன்ற வீரருக்கு இவ்வளவு தொகை ரொம்பவே அதிகம். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் குவித்த வெங்கடேஷ் ஐயர், 2024-ம் ஆண்டு தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு உதவிகரமாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு நடந்த தொடரில் 11 ஆட்டத்தில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மிடில் ஆர்டரில் அவர் வெவ்வேறு வரிசையில் இறக்கப்படுகிறார். அத்துடன் பந்து வீச்சில் அவரை பயன்படுத்துவதில்லை. அவரது சீரற்ற பேட்டிங் வரிசை மற்றும் மெகா தொகைக்கு ஏலம் போனதால் விழுந்த முத்திரை அவருக்கு சரியாக பொருந்தவில்லை. எனவே அவரை அணியில் இருந்து விடுவிப்பது குறித்து கொல்கத்தா அணி பரிசீலிக்க வேண்டும். இதனால் அணியின் இருப்புத் தொகை அதிகமாகும். இப்போது அவரை விடுவித்து விட்டு ஏலத்தில் ஓரளவு நல்ல தொகைக்கு அவரை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருப்பது கொல்கத்தா அணி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.