சென்னை : இறக்குமதி வரி கொள்கையால் பாதித்த தொழில்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்தவேண்டும் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா தொடுத்துள்ள இறக்குமதி வரி யுத்தத்தால் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்முனைவோர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இத்தொழில்களுக்கு வாராக்கடன் (NPA) விதிகள் தளர்த்தப்பட வேண்டும். அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வாராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement