ஆஸ்லோ : ஒஸ்லோ 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் பரிசை அமைதிக்கான நோபல் தேர்வுக் குழு அறிவித்தது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த அரசியல் வாதியான மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரி வந்த ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை. வெனிசுலாவைச் சேர்ந்த போராளி மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஏமாற்றம் அடைந்தார்.