மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அந்த கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணைத் தலைவர் விஜயகுமார், ஏரி நீர்ப்பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளபுத்தூர், கரிக்கிலி, கொளத்தூர், சித்தாமூர், பாப்பநல்லூர், தண்டரை, பேட்டை, துறையூர் மற்றும் மொரப்பாக்கம், கழணிப்பாக்கம், குன்னங்குளத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற முடியும். இந்த சீசனில் மட்டும் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தின் மூலமாக விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் என்று தெரிகிறது.