Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா: பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிப்பு: மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா தொடங்குவதையொட்டி நாளை முதல் கடலில் குளிக்க தடை திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்

வேளாங்கண்ணி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் பேராலயம் திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில் பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள். விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. 8-ந் தேதி (திங்கட்கிழமை) புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்

இதையடுத்து வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் பேராலயத்திற்கு வந்தனர். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பது வழக்கம். தற்போது கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கடற்கரை பகுதிக்கு செல்ல பக்தர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கடலுக்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.