வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2.59 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!
சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2.59 கோடியை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழ்நாடு அரசு விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. வீரப்பன் தேடுதல்வேட்டையில் விசாரணை என்ற பெயரில் மலை கிராம பெண்களை துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. மனித உரிமை மீறல்கள் நடந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டன. புகாரின் அடிப்படையில் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க ஆணையிட்டிருந்தது. இரண்டு தவணைகளாக இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது நிலுவைத் தொகையும் விடுவிக்கப்பட்டது.

