சேலம்: வாழப்பாடி அருகே பாமகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. வாழப்பாடி அருகே பாமக எம்.எல்.ஏ. அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பு நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். வடுகநத்தம்பட்டியில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும் வழியில் காரை மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் அருளுடன் சென்றவர்கள் காயம் அடைந்துள்ளனர். வாழப்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement 
 
 
 
   