வத்தலக்குண்டு: காவல் துறையின் அவசர தொலைபேசி எண் 100க்கு நேற்று முன்தினம் நள்ளிரவு போன் செய்த மர்ம நபர் ஒருவர், வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் இன்று (நேற்று) அதிகாலை 3 மணிக்கு குண்டு வெடிக்கும் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று கழிவறை, பயணிகள் அமரும் இருக்கை, கடைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த மதுரையை சேர்ந்த மனநலம் பாதித்த அன்பு (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


