புதுடெல்லி: வந்தே மாதரம் விவகாரத்தில் ரவீந்திரநாத் தாக்கூரை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், 1937ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலின் சில சரணங்களை நீக்கியது பிரிவினைக்கான விதைகளை விதைத்து என்ற பிரதமரின் கருத்துக்கள் அறியாமையையும் கருத்தியல் சார்பையும் காட்டி கொடுத்தது.
1937ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் காந்தியின் தலைமையில் நடந்தது. இதில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று ரவீந்திரநாத் தாகூர் யோசனைப்படி தீர்மானிக்கப்பட்டது. குருதேவ் ரவீந்திரநாத் தாக்கூரை பிரதமர் அவமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இந்திய சுதந்திர இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை. ஒரு வேளை அதனால்தான் அதன் ஆதரவாளர்களால் அவ்வாறு செய்தவர்களின் கொள்கைகளை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. இதன் மூலம் ரவீந்திரநாத் தாக்கூரை மோடி அவமதித்துள்ளார். மோடி தனது அரசியல் சவால்களை திசை திருப்புகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

