Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வால்பாறைக்கு நாளை மறுநாள் முதல் இ-பாஸ் கட்டாயம்

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை மாவட்டம் வால்பாறைக்கு நவம்பர் 1ம் தேதி (நாளை மறுநாள்) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. எனவே வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும்.

வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெறுவதற்கு https//www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இ-பாஸ் பதிவு செய்யாமல் வால்பாறைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் பெற்றிடும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழியார் சோதனை சாவடியிலும், கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் சோலையார் அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

வால்பாறை தாலுகா முகவரி கொண்ட அனைத்து வாகனங்கள் (சொந்த பயன்பாட்டு வாகனங்களான இரண்டு சக்கரம், நான்கு சக்கரம்) https://www.tnepass.tn.gov.in/home சென்று உள்ளூர் பாஸ் ஒரு முறை மட்டும் பதிவு செய்து கொண்டால் போதும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.