சென்னை: வால்பாறை தொகுதி எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், துறை அன்பரசன், கலிலூர் ரகுமான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement