வல்லமை அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச போலீஸ் பயிற்சி மற்றும் பல்வேறு கல்வி நிதியுதவி திட்டங்கள் மதுரையில் அறிமுகம்
மதுரை விமான நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் பண்பாட்டு மையத்தில் வல்லமை அறக்கட்டளை சார்பில் இலவச காவலர் தேர்வு பயிற்சி மையம் தற்போது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வல்லமை அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவிடும் வகையில் உதவித் தொகை வழங்கிடும் திட்டம், போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கிடும் ஷாடோ கோச்சிங் திட்டம், முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் திட்டம் என பல்வேறு சேவை திட்டங்கள் அறிமுகம் செய்து துவக்கி வைக்கப்பட்டது.
அறக்கட்டளை நான்கு பெண்களால் தொடங்கப்பட்ட அறக்கட்டளை.அறக்கட்டளை மூலமாக நடந்து கொண்டிருக்கும்பல நல்ல திட்டங்களை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்வதற்காக இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது
அடிமட்ட சமுதாயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உதவுவதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறக்கட்டளை மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது. கல்வி மிக முக்கியமான ஒன்று கல்வி மட்டுமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லும்.ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் பொருளாதாரத்தின் அடிப்படையில் படிக்க முடியாத சூழ்நிலை உருவானால் அவர்களை தேர்வு செய்து எங்கள் அறக்கட்டளை சார்பாக படிக்க வைத்து அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம் இதுவரை ஆயிரம் மாணவர்களுக்கு உங்கள் அறக்கட்டளையின் மூலம் உதவியுள்ளோம்.
எங்களது அடுத்த நோக்கம் படித்துவிட்டு வேலைக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படையில் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம். மாணவனுடைய ஆசை என்னவென்றால் காவல்துறையை சேர வேண்டும் அதன் மூலம் எனது பெற்றோருக்கும் ஊருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பொருளாதார பலம் இல்லாமல் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சோர்வடைந்து விடுகிறான்.அதை நிறைவேற்றும் வகையில் வல்லமை கனவுகளுக்கு கை கொடுக்கும் என்ற திட்டத்தின் மூலம் சமுதாயத்தில் பின்தங்கிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் சக மாணவர்களோடு சமமான வாய்ப்போடு போட்டி போட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
டெய்லி வந்து உங்களது அறக்கட்டளை மூலமாக கட்டணமில்லா கல்வி மையம் தொடங்கியுள்ளோம்.பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் தனியாக வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள் ஒரே இடத்தில் தங்கி படிக்கும் விதமாக ஏற்பாடு செய்துள்ளோம். எங்களது பயிற்சி மூலமாக மாணவர்கள் காவல்துறையில் உயர் பதவியில் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருகிறோம்.அதற்காக அவர்களுக்கு தங்கும் இடம் உணவு மற்றும் அடிப்படை வசதி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்.
இதுவரை எங்களிடம் ஒரு 500 மாணவர்கள் உதவி பெற்று படித்து வருகிறார்கள்.நல்ல வழி காட்டுவதன் மூலம் அரசு வேலைக்கும், உயர் பதவிக்கும் செல்லக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறோம் .மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தகுதி வழங்கி அவர்களுக்கு படிப்பில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு. காவல்துறை மருத்துவம் இரண்டு துறைகளும் பணியாற்றுபவர்கள் காக்கும் தெய்வங்கள்.
எங்கள் அமைப்பின் சார்பில்தமிழகம் முழுவதும் 60 மையங்களில் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு எங்கள் பயிற்சி வகுப்பில் வாய்ப்பு அளிக்கிறோம்.போய் பெற்ற காவல் துறை அதிகாரிகளை வைத்து பயிற்சி அளித்து வருகிறோம்.எங்கள் அறக்கட்டளை மூன்று வருடங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.எல்லா சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம் என அறக்கட்டளை டிரஸ்டி உமாதேவி தெரிவித்தார்.இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ட்ரஸ்ட் நிர்வாகிகள் அட்சதாஉதயத்குமார்,வள்ளியம்மை ராமையா உடன் இருந்தனர்