சென்னை: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அரசின் திட்டம் வள்ளலாரின் தத்துவங்களுக்கு விரோதமானவை என நிரூபித்தால் மட்டுமே அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியும் என்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு தெரிவித்துள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஜூன் 24ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
+
Advertisement