திருமலை: வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் டிசம்பர் 1 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக சிறப்பு தரிசனம் நடைபெறும். இதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும். 2025-2026 வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 30, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு, சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இது பொதுவாக டிசம்பர் பிற்பகுதியில் தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்கும். சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய கிடைக்கப்பெறும். ஆன்லைன் டிக்கெட்டுகளைப் பெற திருப்பதி தேவஸ்தான இணையதளத்தை சரிபார்க்க வேண்டும்.
இந்த நாட்களில் திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். டிக்கெட் முன்பதிவு மற்றும் தரிசனத் தேதிகள் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்க்கவும்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் டிசம்பர் 1 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.


