திருவண்ணாமலை: தமிழர்களை வஞ்சிக்கவே ஒன்றிய அரசு எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளது என திருவண்ணாமலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார். ஜனநாயகத்தின் கழுத்துக்கு கத்தி வைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. எஸ்.ஐ.ஆர். பெயரில் வெளிமாநில வாக்காளர்கள் 65 லட்சம் பேரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். 75 லட்சம் தமிழர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் எஸ்.ஐ.ஆர். எனும் அநியாயம் நடக்கிறது என தெரிவித்தார்.
+
Advertisement


