தேனி: 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69.77 அடியை எட்டியதால் விரைவில் அணை நிரம்ப உள்ளது. அணை நிரம்ப உள்ளதால் மதகுப்பகுதிகளில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அணையின் 7 பிரதான பெரிய மதகுகள், 7 சிறிய மதகுகள் வழியாக நீரை திறந்து சோதனை மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணை நிரம்ப உள்ளது.
+
Advertisement